பினராயி விஜயன்
கேரள அரசின் தற்போதைய முதலமைச்சரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார்.இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிகுழு உறுப்பினர் ஆகவும் உள்ளார்.
பிறப்பு:
இவர் 1944 ஆம் ஆண்டு மே24 அன்று கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பினராயி என்ற கிராமத்தில் பிறந்தார்.
அரசியல் வாழ்க்கை துவக்கம்:
இவர் 1964 இல் மாணவர் சங்கத்திலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர். கேரள மாணவர் சங்கத்தின்(KSF) மாநில தலைவர் மற்றும் மாநில செயலாளர் பதவியில் இருந்தவர். கேரள வாலிபர் சங்கத்திலும்(KSYF) தலைவராக இருந்தார். கேரள கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்...
சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்:
கேரளாவில் 1970 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1977,1991,1996 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் பதவியை வகித்தார்.அதன் பின்பு இ. கே. நாயனார் தலைமையிலான அமைச்ரவையில் மின்சார துறை மற்றும் கூட்டுறவு துறைகளில் அமைச்சராக பதவியில் இருந்தார்.
கட்சியில் இருந்து நீக்கம் மற்றும் சேர்ப்பு:
2007 மே 7 இல் பினராயி விஜயன் மற்றும் வி.எஸ்.அச்சுதானந்தன் இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்..இருவரும் கட்சியின் வரைமுறைகளை மீறி விமர்சித்து கொண்டதற்காக நீக்கப்பட்டனர்.பின்னர் மீண்டும் பினராயி விஜயன் மீண்டும் அரசியல் தலைமை குழுவில் சேர்த்து கொள்ளப்பட்டர்.
ஊழல் குற்றச்சாட்டு:
இவர் 1998 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சியில் அவர் மின்துறை அமைச்சர் ஆக பதவி வகித்த போது 3 நீர் மின் நிலையங்கள் நவீனமயமாக்க கனடா நாட்டைச் சார்ந்த எஸ் என் சி லாவ்லின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.அந்த ஒப்பந்தத்தில் கேரள அரசுக்கு ரூ.374.50 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும்,ஒப்பந்தபடி மலபார் புற்றுநோய் மையத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ 92.3 கோடி அளிக்கவில்லை என்பதையும் தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் சுட்டி காட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த அறிக்கை தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தது.
லாவ்லின் வழக்கிலிருந்து விடுவிப்பு:
வழக்கு பதிவு செய்து ஓராண்டு ஆகியும் மத்திய புலனாய்வு துறை குற்றத்தை நிருபிக்காததல் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர். ரகு, குற்றம் சாட்டப்பட்ட பினராயி விஜயன் மற்றும் ஐந்து பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்..
முதலமைச்சர்:
2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்து அங்கு உள்ள 140 இடங்களில் 85 தொகுதிகளில் வென்று முன்பு இருந்த உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அகற்றபட்டு முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றினார்..
பின்னர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 140 இடங்களில் 99 இடத்தில் வென்று மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்..
இந்த இரண்டு தேர்தல்களில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மடம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்..

Comments
Post a Comment