Skip to main content

மம்தா பானர்ஜி அரசியல் வாழ்க்கை

 மம்தா பானர்ஜி




இவர் மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவின், அஷ்ரா பகுதியில் சனவரி 5,1955 அன்று பிறந்தார். மேற்கு வங்க மாநிலத்தின் தற்போதை
 முதலமைச்சரும்,அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் நிறுவனரும் ஆவார்...
இவரை வங்காள மக்கள் திதீ என்றே அழைக்கிறார்கள். திதீ என்றால் வங்காளத்தில் அக்கா என்று பொருள்.

படிப்பு:

கொல்கத்தாவில் உள்ள பசந்தி தேவி கல்லூரியில் பட்டம் பெற்றார்.பின்னர் ஜோகேஷ் சந்திர சௌதுரி சட்ட கல்லூரியில் சேர்ந்து சட்ட படிப்பை முடித்தார்..


அரசியல் வாழ்க்கை:

மம்தா பானர்ஜி 1970ல் காங்கிரசு கட்சியில் தன்னுடைய முதல் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.
பின்னர் படிபடியாக உள்ளூர் காங்கிரசில் முன்னேறி 1976 முதல் 1980 வரை மேற்கு வங்க மகளிர் காங்கிரசின் பொது செயலாளர் ஆக இருந்தார்...

பின்னர் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய மார்க்சிய அரசியல் வாதி சோம்நாத் சட்டர்ஜி அவர்களை ஜாதவ்பூர் தொகுதியில் வென்று சிறு வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஆன பெருமை பெற்றார்..

அனைத்திந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆகவும் பதவி வகித்தார்.

அதன் பின்பு 1989ல் நடந்த தேர்தலில் தோல்வி சந்தித்து அடுத்த இரண்டு வருடங்களில் 1991 ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.

அதன் பின்னர் நடந்த 1996,1998,1999,2004,2009 நடந்த தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து கொல்கத்தா தெற்கு தொகுதியின் நிரந்தர உறுப்பினராக இருந்தார்...

1997ல் காங்கிரசில் இருந்து பிரிந்து, மேற்கு வங்க காங்கிரசை பிரித்து அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற ஒரு கட்சியை நிறுவினார்...
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அவரது பல அரசியல் இயக்கங்களால் மேற்கு வங்க மாநிலத்தில் நிரந்தர எதிர்கட்சியாக இருந்தது.

1999 ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர் வண்டி துறை அமைச்சராக இருந்தார்...2001ல் ஆளும் கூட்டணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

பின்பு 2004 ல் மீண்டும் அதே கட்சியின் அமைச்சரவையில் எரி சக்தி துறை அமைச்சராக இருந்தார்....

2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து அக்கட்சியின் அமைச்சரவையில் இரண்டாவது முறை தொடர் வண்டி துறை அமைச்சராக இருந்தார்.அந்த கால கட்டத்தில் தன்னுடைய முதல் வரவு செலவு திட்டத்தில் நி
றுத்தமில்லா தொடர் வண்டிகளை அறிமுக செய்தார்.அது மட்டும் இல்லாமல் நெரிசல் மிகுந்த நேரத்தில் மகளிருக்கான சிறப்பு தொடர் வண்டிகளையும் அறிமுகப்படுத்தினார்..

முதலமைச்சர் பதவி:

2011ஆம் ஆண்டு ஆறு கட்டமாக நடந்த சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, தொடர்ந்து 34 ஆண்டுகளாக ஆண்டு வந்த இடதுசாரி முன்னணி அரசினை அகற்றி முதல்வர் ஆனார்...கூட்டணி கட்சியான காங்கிரசுடன் இணைந்து 294 தொகுதிகள் உள்ள மேற்கு வங்காளத்தில் 227 இடங்களை கைப்பற்றியது.இதில் மம்தா பானர்ஜி யின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி 184 இடங்களை வென்று இருந்தது குறிப்பித்தக்கது....

2016 சட்ட மன்ற தேர்தல்:

2016 ஆம் ஆண்டு ஆறு கட்டமாக 
 நடந்த  சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மம்தா பானர்ஜி யின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி 211 இடங்களை வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இத்தேர்தலில் மம்தா பானர்ஜி பபானிபூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்...

2021 சட்ட மன்ற தேர்தல்:

2021 ஏப்ரல் மாதத்தில் ஆறு கட்டமாக நடந்த தேர்தலில் நந்தி கிராம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சுவெந்து அதிகாரியிடம் 1956 வாக்குகள் வித்தியாச்தில் வெற்றியை இழந்தார்.இருப்பினும் தான் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளை வென்று மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்...





 

Comments

Popular posts from this blog

பினராயி விஜயன்

  பினராயி விஜயன் கேரள அரசின் தற்போதைய முதலமைச்சரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார்.இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிகுழு உறுப்பினர் ஆகவும் உள்ளார். பிறப்பு : இவர் 1944 ஆம் ஆண்டு மே24 அன்று கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பினராயி என்ற கிராமத்தில் பிறந்தார். அரசியல் வாழ்க்கை துவக்கம் : இவர் 1964 இல் மாணவர் சங்கத்திலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர். கேரள மாணவர் சங்கத்தின்(KSF) மாநில தலைவர் மற்றும் மாநில செயலாளர் பதவியில் இருந்தவர். கேரள வாலிபர் சங்கத்திலும்(KSYF) தலைவராக இருந்தார். கேரள கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்... சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் : கேரளாவில் 1970 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1977,1991,1996 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் பதவியை வகித்தார்.அதன் பின்பு இ. கே. நாயனார் தலைமையிலான அமைச்ரவையில் மின்சார துறை மற்றும் கூட்டுறவு துறைகளில் அமைச்சராக பதவியில் இருந்தார். கட்சியில் இருந்து நீக்கம் மற்றும் சேர்ப்பு : 2007 மே 7 இல்  பினராயி  விஜயன...