Skip to main content

Posts

Showing posts from May, 2021

பினராயி விஜயன்

  பினராயி விஜயன் கேரள அரசின் தற்போதைய முதலமைச்சரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார்.இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிகுழு உறுப்பினர் ஆகவும் உள்ளார். பிறப்பு : இவர் 1944 ஆம் ஆண்டு மே24 அன்று கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பினராயி என்ற கிராமத்தில் பிறந்தார். அரசியல் வாழ்க்கை துவக்கம் : இவர் 1964 இல் மாணவர் சங்கத்திலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர். கேரள மாணவர் சங்கத்தின்(KSF) மாநில தலைவர் மற்றும் மாநில செயலாளர் பதவியில் இருந்தவர். கேரள வாலிபர் சங்கத்திலும்(KSYF) தலைவராக இருந்தார். கேரள கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்... சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் : கேரளாவில் 1970 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1977,1991,1996 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் பதவியை வகித்தார்.அதன் பின்பு இ. கே. நாயனார் தலைமையிலான அமைச்ரவையில் மின்சார துறை மற்றும் கூட்டுறவு துறைகளில் அமைச்சராக பதவியில் இருந்தார். கட்சியில் இருந்து நீக்கம் மற்றும் சேர்ப்பு : 2007 மே 7 இல்  பினராயி  விஜயன...

மம்தா பானர்ஜி அரசியல் வாழ்க்கை

  மம்தா பானர்ஜி இவர் மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவின், அஷ்ரா பகுதியில் சனவரி 5,1955 அன்று பிறந்தார். மேற்கு வங்க மாநிலத்தின் தற்போதை ய  முதலமைச்சரும்,அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் நிறுவனரும் ஆவார்... இவரை வங்காள மக்கள் திதீ என்றே அழைக்கிறார்கள். திதீ என்றால் வங்காளத்தில் அக்கா என்று பொருள். படிப்பு: கொல்கத்தாவில் உள்ள பசந்தி தேவி கல்லூரியில் பட்டம் பெற்றார்.பின்னர் ஜோகேஷ் சந்திர சௌதுரி சட்ட கல்லூரியில் சேர்ந்து சட்ட படிப்பை முடித்தார்.. அரசியல் வாழ்க்கை: மம்தா பானர்ஜி 1970ல் காங்கிரசு கட்சியில் தன்னுடைய முதல் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் படிபடியாக உள்ளூர் காங்கிரசில் முன்னேறி 1976 முதல் 1980 வரை மேற்கு வங்க மகளிர் காங்கிரசின் பொது செயலாளர் ஆக இருந்தார்... பின்னர் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய மார்க்சிய அரசியல் வாதி சோம்நாத் சட்டர்ஜி அவர்களை ஜாதவ்பூர் தொகுதியில் வென்று சிறு வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஆன பெருமை பெற்றார்.. அனைத்திந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆகவும் பதவி வகித்தார். அதன் பின்பு 1989ல் நடந்த தேர்தலில...